பாரதிதாசன்
பல்கலைக்கழக மகளிரியல் துறை,
தண்ணீர்
அமைப்பு இணைந்து நடத்தும்
மகளிர்
சூழலியல் மாநாட்டில் ( 26-03-2018) சிறப்பு
செய்யப்படும் செயல்பாட்டாளர்கள்
குறித்த
குறிப்புகள்
---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
'இயல்வாகை'
அழகேஸ்வரி
நம்மாழ்வாரின்
கனவுப் பல்கலைக்கழகமான வானகம்
உயிர்ச்சூழல் நடுவத்தில்
வாழ்வியல்,
நஞ்சில்லா
வேளாண்மை,
மாற்றுக் கல்வி
பயின்றவர்.
பிளாஸ்டிக்
பைகளுக்கு மாற்று உள்பட
சூழலுக்குப் பெருங்கேடில்லாத
பொருட்கள்,
ரசாயனக்
கலப்பின்றி விளைவிக்கப்பட்ட
உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக்
கொண்டு திருப்பூரில் தொடர்ச்சியாக
-'நம்ம
ஊரு சந்தை'-யை
நடத்தி வருகிறார்.
'இயல்வாகை'
என்ற பெயரில்
சூழலியல் புத்தகங்களைப்
பதிப்பிக்கும் அரிய பணியையும்
செய்து வருகிறார்.
இதுவரை இந்தப்
பதிப்பகத்தில் 30
புத்தகங்கள்
அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
தற்சார்பு
வாழ்வியல்,
உணவு அரசியல்,
நீர்மேலாண்மை
உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து
பேசியும்,
எழுதியும்,
இயங்கியும்
வருகிறார்
அழகேஸ்வரி.
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
'தூய்மை'
பானு
சித்ரா
நாம்
பொதுவெளிகளில் பேசக் கூசும்
'சானிட்டரி
நாப்கின்'
பயன்பாட்டை
உடல் நலன் பேணும் அரிய நோக்கில்,
'அணையாடை'
என்று அழகிய
தமிழில் ஒழுங்குபடுத்தி,
தொடர்ச்சியாகப்
பேசி வருகிறார் தூய்மை பானு
சித்ரா.
சானிட்டரி
நாப்கின்களால் ஏற்படும் உடல்
பாதிப்புகளையும்,
கோடிக்கணக்கில்
பயன்படுத்தப்பட்டு பூமியில்
வீசப்படும் சூழலியல் கேட்டினையும்
கருத்தில் கொண்டு மீண்டும்
பயன்படுத்தும் கொள்கையின்படி,
அணையாடையைத்
தயாரிக்கிறார்.
வெறுமனே
மாற்று ஏற்பாட்டை வியாபாரமாக்கும்
தன்மையில் அல்லாமல்,
அணையாடையை
பெண்களே தயாரித்துப்
பயன்படுத்தவும்-
'கருவறைக்
கல்வி' என்ற
பெயரில் தொடர் பயிற்சி முகாம்களை
நடத்தி வருகிறார்.
----------------------------------------------------------------------------------------------------------
'ஓசை'
அகிலா
கோவையைச்
சேர்ந்த ஓசை சூழலியல் அமைப்பின்
அங்கம் இவர்.
மேற்குத்
தொடர்ச்சி மலையில் காடு,
மலையெனச்
சுற்றித் திரிவதும்,
வனத்தின் அருமை
பெருமைகளை மக்களுக்குச்
சொல்லித் தருவதும் அகிலாவுக்குப்
பிடித்தமான பணி.
நுண்ணுயிரியல்,
பறவையியலில்
பட்டம் மற்றும் பட்டயப்
படிப்புகளை முடித்திருக்கும்
அகிலா, தற்போது-
'சங்க இலக்கியங்களில்
சூழலியல்' என்ற
தலைப்பில் பாரதியார்
பல்கலைக்கழகத்தில் முனைவர்
பட்ட ஆய்வாளராக உள்ளார்.
சமூகவியல்
சார்ந்தும்,
சூழலியல்
சார்ந்தும் வளர்ந்து வரும்
இளம் பேச்சாளர்.
--------------------------------------------------------------------------------------------------------
வள்ளி
சரண்
காரைக்குடியில்
'ஓகே
ஓகே' என்பதன்
விரிவாக்கமாக 'ஊர்
கூடி ஊருணி காப்போம்'
என்ற அமைப்பை
உருவாக்கி நடத்தி வரும்
பெண்மணி.
பெங்களூவில்
வசித்து வந்தாலும்,
ஊருக்குச்
செல்லும்போதெல்லாம் அந்த
அமைப்பின் பணிகளுக்கு கூடுதல்
முக்கியத்துவம் கொடுத்து
இயக்கி வருகிறார்.
காரைக்குடி
நகரின் மொத்த கழிவையும் தாங்கி
நிற்கும் கண்மாய் ஒன்று
தூர்வாரப்பட்டிருக்கிறது.
காரைக்குடியின்
புறநகர்ப் பகுதியில் உருவாகி
தொண்டியில் கடலில் கலக்கும்
'தேனாறு'
என்றொரு
சிற்றாற்றை சீரமைக்கும்
பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆற்றின்
மொத்தமுள்ள 44
கிலோமீட்டர்
தொலைவில் தற்போது வரை சுமார்
8 கிலோமீட்டர்
தொலைவு சீரமைப்புப் பணிகள்
முடிந்துள்ளன.
கழிவுநீரை
எவ்வித ரசாயனக் கலப்பின்றி
சுத்திகரிக்கும் முறைகளை,
தான் போகுமிடமெல்லாம்
பரப்பி வருகிறார்.
காரைக்குடிக்கு
அருகே ஓர் அடர்வனத்தை உருவாக்கும்
முயற்சிகள் நடைபெற்று
வருகின்றன.
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------




Comments
Post a Comment