மாணவிகள் சூழலியல் பயணம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தினர் 50 பேர் சூழலியல் பயணமாக பொன்னணியாறு அணைக்கும், நம்மாழ்வாரின் வானகம் பண்ணைக்கும் சனிக்கிழமை சென்று வந்தனர். திருச்சி மாவட்ட எல்லைக்குள் தொடங்கி, இதே மாவட்ட எல்லையில் முடிவடையும் பொன்னணியாற்றின் அணையில், நதியின் பிறப்பு குறித்து மாணவிகள் பார்த்து அறிந்தனர். நம்மாழ்வாரின் வானகம் பண்ணையில், இயற்கை வேளாண்மை, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி ஆகிய தலைப்புகளில் மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. இயற்கையியல் பயிற்சியாளர் செந்தில் குமரன் பயிற்சியளித்தார். தண்ணீர் அமைப்பின் இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ் உள்ளிட்டோர் மாணவிகளை இப்பயிற்சியை ஒருங்கிணைத்தனர். ஆண்டு தோறும் மாணவர்களுக்கான இதுபோன்ற பட்டறிவுப் பயணங்களை தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தினர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது







Comments