Skip to main content
தண்ணீர் அமைப்பின் 4ஆம் ஆண்டுத் தொடக்க விழாவும், ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டமும் திருச்சி ஹோட்டல் செவனாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எம். சேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கே.சி. நீலமேகம் வரவேற்றார். இணைச் செயலர் கி. சதீஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். உயிர்த்துளி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. படத்தை இயக்கிய இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் அதிகளவு மரங்களை வளர்த்து பராமரித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பசுமை விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து சூழலியல் அறிஞர் பாமயன் சூழலியல் பிரச்னைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். நிகழ்வை அமைப்பின் பொருளாளர் ஜி. சிவகுருநாதன் தொகுத்து வழங்கினார். இணைச் செயலர் ஆர்.ஏ. தாமஸ் நன்றி கூறினார். விழாவில், தண்ணீர் அமைப்பின் துணைத் தலைவர் பொன்னிளங்கோ, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மனோகரன், ராஜா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தனலட்சுமி பாஸ்கரன், த. விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment